சிங்கப்பூர் to வேலூர் காதல் கதை! காதலனை தேடி வேலூர் விரைந்த சிங்கப்பூர் இளம்பெண்; காதல் கைகூடுமா!singapore-girl-came-to-vellore-seeking-her-boyfriend

சிங்கப்பூரிலிருந்து தன்னுடைய காதலனை தேடி வேலூருக்கு வந்த இளம்பெண்; துரத்தியடிக்கும் காதலனின் குடும்பத்தினர்; காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள பெண்ணின் காதல் கைகூடுமா!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குண்டாலமலையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுவராஜ், இவருக்கு வயது 32. இவர் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அங்கே அவருக்கும் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் மேனகா என்ற  மலேசிய பெண்ணிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டு காலமாக ஒரே வீட்டில் ஒன்றாக தங்கி குடும்பம் நடத்தியதாக மேனகா கூறியுள்ளார்.

singapore girl came to vellore seeking her boyfrie

மலேசிய பெண்ணான மேனகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருடைய கணவர் குழந்தைகளையும் மேனகாவையும் விட்டுவிட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதனை அறிந்துகொண்ட பசுவராஜ் சமூக வலைதளத்தின் மூலம் மேனகாவுடன்  ஓராண்டிற்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். அந்த அறிமுகம் நாளடைவில் வளர்ந்து காதலாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாகவே கணவன் மனைவி போல் சிங்கப்பூரில் வாழ்ந்துள்ளனர். திருப்பத்தூரில் இருக்கும் பசுவராஜின் குடும்பத்தினருடனும் மேனகா பலமுறை பேசி இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர்கள் மேனகாவிடம் உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் தேதி 14 ஆம் தேதி பசுவராஜ் சிங்கப்பூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஊருக்கு திரும்பிய பசுவராஜ் மேனகாவிடம் அவரது வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்குக்கொடுத்த பசவராஜ் மேனகாவை உடனே வேலூருக்கு வருமாறு கூறி தனது வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.

singapore girl came to vellore seeking her boyfrie

செப்டம்பர் 27ஆம் தேதி வரை பசுவராஜ் மேனகா உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். ஆனால் அதன்பிறகு பசுவராஜின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பதறிப்போன மேனகா 31ம் தேதி சிங்கப்பூரில் இருந்து திருப்பத்தூருக்கு தன் காதலனை தேடி வந்துள்ளார். இரண்டு வாரம் சுற்றுலா விசாவில் வந்துள்ள மேனகாவால் இன்னும் பசுவராஜை நேரில் பார்க்க முடியவில்லை.

மேனகா பசுவராஜை தேடி, அவர் கொடுத்த முகவரியில் அவரது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு நன்றாக பேசிய அவரது குடும்பத்தினர் இப்போது மேனகாவை அடித்து விரட்டியுள்ளனர். அவர்கள் பசுவராஜை மறைத்து வைத்து மேனகாவை பார்க்க விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் என்ன செய்வதென்று அறியாத மேனகா வேலூர் மாவட்ட காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் பசுவராஜ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்றும் அச்சம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிங்கப்பூரிலிருந்து தன் காதலனை தேடி திருப்பத்தூர் வந்துள்ள மேனகாவின் காதல் கைகூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்