உலகம் லைப் ஸ்டைல்

பள்ளி மாணவனுடன் தகாத உறவு கொண்ட 24 வயது பெண் ஆசிரியை! என்ன தண்டனை தெரியுமா?

Summary:

school teacher illegal affair with student

வெளிநாடுகளில் ஆணும் பெண்ணும் உறவு கொள்வது சாதாரண விஷயம் என நம்மில் பலர் எண்ணுவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டால் அவருக்கு கிடைக்கும் தண்டனை நம் நாட்டை விட கொடுமையானது. அப்படி ஒரு வழக்கு தான் சமீபத்தில் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நடாஷா என்ற 24 வயது பெண் ஆசிரியை ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவருடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார் அந்த ஆசிரியையை கடந்த 24ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

நடாஷா அமெரிக்காவின் அலபாமா நகரில் உள்ள சிட்னி லானியர் என்ற மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக கடந்த ஆகஸ்ட் மாதம் பணியில் சேர்ந்துள்ளார். இவர் கடந்த எட்டாம் தேதி தன்னிடம் பயிலும் மாணவர்களில் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் யாரும் இல்லாத சமயம் பார்த்து அவருடன் உறவு வைத்துக்கொண்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த மாணவர் தன்னுடைய பெற்றோரின் உதவியுடன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் புகார் அளித்ததை அறிந்த ஆசிரியை திடீரென சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நாட்டில் சட்டப்படி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement