லைப் ஸ்டைல்

சாமையை வைத்து புது ரெசிபி... நம்ம வீட்டு குட்டீஸ்க்கு பிடித்த கொழுக்கட்டை செய்யலாம் வாங்க...!

Summary:

சாமையை வைத்து புது ரெசிபி... நம்ம வீட்டு குட்டீஸ்க்கு பிடித்த கொழுக்கட்டை செய்யலாம் வாங்க...!

சாமையில் கால்சியம், இரும்புசத்து அதிகமாக இருப்பதனால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. தேங்காயில் இருக்கும் புரோட்டின் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சாமி அரிசி மாவு - 1 கப்
உளுந்து - 1 தேக்கரண்டி
மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 1 தேக்கரண்டிசெய்முறை :

★முதலில் முந்திரி மற்றும் தேங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய், முந்திரி, தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

★அடுத்து அதில் சிறிதளவு நீர் சேர்த்து உப்பு கலந்து கொதிக்க விட வேண்டும்.

★நன்கு கொதித்ததும் அதில் சாமை அரிசி மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறி வேகவிட வேண்டும்.

★பின் இந்த கலவையை ஆறவிட்டு கையால் கொழுக்கட்டைகள் போல பிடித்து 15 நிமிடம் ஆவியில் வேக விட வேண்டும்.

★இறுதியாக புதினா அல்லது கொத்தமல்லி சட்னியுடன் இதனை சாப்பிடும் போது சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விதமாக இருக்கும்.


Advertisement