விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
மக்களே கவனம்.. சர்க்கரைவள்ளி கிழங்கில் ரசாயன கலப்படம்.. கண்டுபிடிப்பது எப்படி?
சர்க்கரைவள்ளி கிழங்கில் ரோடாமைன் பி ரசாயனம் கலக்கப்படுகிறதா? வீட்டிலேயே எளிதாக கண்டறியும் முறைகள் குறித்து காணலாம்.
சீசன் நேரங்களில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கில் ரோடாமைன் பி (Rhodamine B) என்ற ரசாயனம் கலக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரசாயனமானது காகிதம், மை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நிலையில், இது சாப்பிடுவதற்கு முற்றிலும் ஆபத்தானதாகும். சந்தையில் நாம் வாங்கும் சர்க்கரைவள்ளி கிழங்கில் ரசாயன கலப்படத்தை கண்டறிவது எப்படி? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் ரசாயனம்:
சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் கலப்படத்தை கண்டறிய பருத்தி துணியை பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. பருத்தி துணியை தண்ணீரில் நனைத்து சர்க்கரைவள்ளி கிழங்கின் மேற்பரப்பில் தேய்க்க வேண்டும். கலப்படம் இல்லாத சர்க்கரைவள்ளி கிழங்கின் நிறம் மாறாது. ஆனால் சிவப்பு அல்லது ஊதா நிறத்திற்கு அது மாறும் பட்சத்தில் அது கலப்படம் என்பது உறுதியாகிறது.
இதையும் படிங்க: கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!

கண்டறிவது எப்படி?
அதேபோல அதனை சுத்தமான நீரில் ஊற வைக்கும்போது தண்ணீரின் நிறம் மாறினால் அது சாயம் பூசியதாக இருக்கலாம். இயற்கையாக சர்க்கரைவள்ளி கிழங்கு வேகும் போது தண்ணீரின் நிறம் மாறாது. சர்க்கரைவள்ளி கிழங்கை நாம் சாப்பிடும் போது கசப்பான அல்லது வித்தியாசமான சுவை, தொண்டையில் எரிச்சல் போன்றவை இருந்தால் அதில் கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
கவனிக்க வேண்டியவை:
அதேபோல பிரகாசமான பிங்க் நிறத்தில் பளபளப்பாக இருப்பதையும் தவிர்ப்பது நல்லது. அதில் ரசாயனம் சேர்க்கப்பட்டு இருக்கலாம். இயற்கையான நிறம் மேற்பரப்பில் மண் கறைகள் போன்றவற்றை கொண்டிருக்கும். சந்தையில் இருந்து நாம் வாங்கும் சர்க்கரைவள்ளி கிழங்கினை நன்கு கழுவி பின் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
இதையும் படிங்க: Cauliflower: காலிப்ளவர் வாங்கும்போது இந்த விஷயத்தை கவனிக்க மாந்துடாதீங்க.. இல்லத்தரசிகளே நோட் பண்ணுங்க.!