Cauliflower: காலிப்ளவர் வாங்கும்போது இந்த விஷயத்தை கவனிக்க மாந்துடாதீங்க.. இல்லத்தரசிகளே நோட் பண்ணுங்க.! 



how-to-choose-fresh-cauliflower-simple-buying-tips-for

நாம் விரும்பி சாப்பிடும் பொருளை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதில் உடல்நலத்துக்கு தீமை ஏற்படுத்தும் விஷயங்களும் இருக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் காலிபிளவரை பார்த்தால் பலரும் விரும்பினாலும், சிலநேரம் குழந்தைகள் அதனை கண்டு விலகி ஓடுவார்கள். காரணம், அதில் இருக்கும் புழுக்கள் தொடர்பான அச்சம். காலிபிளவரை வாங்கும் எளிய முறை குறித்து இன்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

cauliflower

பூக்களின் நெருக்கம்:
காலிபிளவரை முதலில் அளவை பெரிது/சிறிது என பிரிக்காமல், பூவின் அடர்த்தியை கவனித்து வாங்க வேண்டும். அவை ஒன்றுடன் மற்றொன்று எவ்வுளவு நெருக்கமாக பூக்களை கொண்டுள்ளன என்பதை கவனிக்க வேண்டும். வெளிர் மஞ்சள், கிரீமி வெள்ளை ஆகிய நிறத்தில் இருந்தால் அவை புதியது எனவும் அர்த்தம். அதே நேரத்தில், காலிப்ளவரின் பூக்கள் விரித்து, மொட்டுக்கள் இடைவெளி கொண்டு இருந்தால் அது பழையது.

இதையும் படிங்க: கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!

cauliflower

5 நிமிடங்கள் அவசியம்:
மலர்கள் விரிந்து காணப்படும் பூக்களில் புழுக்களும் இருக்கும். அவை விரைந்து அழுகியும் போகலாம். இதனை சமைத்தாலும் நமக்கு சுவை இல்லாதது போல தோன்றும். காலிப்ளவரில் எப்போதும் பூச்சிக்கொல்லிகள் இருக்கும். அதனால் சமைக்கும் முன் காலிபிளவரை சூடான நீரில் மஞ்சள் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி சமைத்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க: இல்லத்தரசிகளே.. டீயை இப்படி குடிப்பீங்களா? இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு தவறை திருத்திக்கோங்க.!