AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!
சந்தைகளில் அதிகளவில் கலப்பட வெல்லம் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், உண்மையான வெல்லம் எது? என்பதை அடையாளம் காண சில எளிய முறைகளை அறிந்து கொள்வது அவசியம். சோதனை, பிசுபிசுப்பு தன்மை, பாகு வாசனை போன்றவற்றை வைத்து கலப்பட வெல்லத்தை கண்டறியலாம்.
பாரம்பரியமான முறையில் கரும்புச் சாறு எடுத்து காய்ச்சி பின் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதில் மண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை என பல விதங்கள் இருக்கின்றன. வெள்ளை சர்க்கரையை விட கூடுதலான விலை கொண்ட வெல்லம் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தினமும் சிறிதளவு வெல்லம் துண்டு சாப்பிடுவது பல நன்மைகளை கொடுக்கும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். குளிர் காலத்தில் வெல்லம் சாப்பிடுவது உடல் வெப்பத்தை அதிகரிக்க உதவும்.
வெல்லத்தின் நன்மைகள்:
குளிருக்கு இதமாக கதகதப்பாக இருக்கவும், உடலுக்குள் இருக்கும் சளி வெளியேறவும், பருவ கால நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கவும் வெல்லம் உதவும். வெல்லம் செரிமான ஆற்றலை மேம்படுத்தி நமது உடல் நலனை பாதுகாக்கும். இவ்வாறான வெல்லம் கலப்படம் செய்யப்படுவதால் அதனை நமக்கு கண்டறியவும் தெரிய வேண்டும். அதற்கு முதலில் வெல்லம் வாங்கி வந்த பின்னர் ஒரு கல்லில் வைத்து இடித்து பார்த்தால் நன்கு பொடியாக இருந்தால் அது நல்லது என பொருள்படும்.

கலப்பட வெல்லத்தை கண்டுபிடிக்க டிப்ஸ்:
பொடியாக இல்லாமல் நரநரவென இருந்தால் அது கலப்படம் ஆகும். அதே நேரத்தில் சிறிதளவு பிசுபிசு தன்மையுடன் இருந்தால் அது நல்லது என்று அர்த்தம். கையில் பிசுபிசுப்பு இல்லாமல் ஒட்டாமல் மணல் போல இருந்தால் அதில் சோடா அல்லது மணல் போன்றவையும் கலப்படம் செய்து இருக்கலாம். நாம் வாங்கும் வெல்லத்தை பாகு போல காய்ச்சும் போது பாகில் கேரமல் வாசனை வந்தால் அது சுத்தமான வெல்லம் ஆகும். வேறுவிதமான வாசனை வந்தால் அது கலப்படம். இதுபோன்ற விஷயங்களை செய்து கலப்பட வெல்லம் எது? உண்மையான வெல்லம் எது? என கண்டுபிடிக்கலாம்.