"ஈறுகளில் ரத்தம் கசிகிறதா?!" மருந்தே இல்லாமல் சரி செய்யலாம்!



Remedies for blood in gum

பொதுவாகவே நம் அனைவருக்கும் இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் பண்டிகைக் காலங்களில் அதிகமான இனிப்பை பலரும் உண்போம். காரணம் இனிப்பு சுவைக்கு சந்தோஷத்தை தூண்டும் தன்மை உள்ளது. அதிகம் இந்த இனிப்புகளை உண்பது பற்களை பாதிக்கும்.

Healthy

அதிகளவில் இனிப்பு உண்பதால், பற்களில் சேதம் ஏற்படுகிறது. மேலும் பல்வேறு நோய் உபாதைகளும் ஏற்படுகின்றன. குழந்தை கூட பற்சிதைவு, பற்குழி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது மிகவும் அவசியமாகிறது.

காலையில் இருந்து நாம் உண்ணும் உணவுகளால் பற்களில் படிந்துள்ள கிருமிகளை நீக்க இரவு நேரத்திலும் பல்துலக்குவது அவசியமாகிறது. இதனால் பற்களில் ஓட்டை விழுவதை 50% வரை குறைக்கலாம். மேலும் இனிப்புகளை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக உண்பதே நல்லது.

Healthy

அதிகமாக குடித்து நம்மை நீரேற்றமாக தண்ணீர் வைத்திருப்பது, பற்சிதைவை ஏற்படுத்தும் அமிலங்களை நீர்த்துப்போகச் செய்ய உதவும். மேலும் அடிக்கடி பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள், வழிகாட்டுதலையும் பெறுவது நல்லது.