முருங்கைக்கீரை சூப் இப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க.. டேஸ்ட் வேற லெவல் இருக்கும்.!?

முருங்கைக்கீரை சூப் இப்படி செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க.. டேஸ்ட் வேற லெவல் இருக்கும்.!?



Recipe and health benefits of muringa soup

பொதுவாக பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் தான் அதிகமாக பிடிக்கிறது எனவே குழந்தைகளுக்குப் பிடித்தமான, ஊட்டச்சத்தும் நிறைந்த முருங்கை கீரையை சூப் செய்து கொடுத்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகரிப்பதோடு, குழந்தைகளுக்கும் பிடித்தமான உணவாகவும் இருக்கும்.

Healthy

முருங்கைக்கீரை சூப் செய்ய தேவையான பொருட்கள்

முருங்கைக்கீரை, தக்காளி, சின்ன வெங்காயம், சீரகம், மல்லி விதைகள், இஞ்சி, பூண்டு, பாசி பருப்பு,

செய்முறை
முதலில் குக்கரில்  முருங்கை கீரையை நன்றாக கழுவி போட்டுக் கொள்ளவும். பின்பு அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், தக்காளி, சீரகம், மல்லி விதைகள், இடித்து வைத்த இஞ்சி, பூண்டு மற்றும் பாசி பருப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பின்பு நன்றாக வெந்ததும் குக்கர் மூடியை திறந்து ஆற விடவும்.

Healthy

நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த முருங்கை கீரை கலவைகளை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்பு இதை ஒரு டம்ளரில் ஊற்றி மிளகு மற்றும் சீரக தூள் சேர்த்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்ட சத்துகளும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.