கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க இந்த மசாலா மோர் குடித்து பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்க இந்த மசாலா மோர் குடித்து பாருங்க.! சுவை வேற லெவலில் இருக்கும்.!?



Recipe and benefits for drinking masala butter milk

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு பல வகையான நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் உடலை குளிர்ச்சியாக வைக்க இளநீர், மோர், கரும்பு சாறு போன்ற பலவகையான இயற்கையான பானங்கள் குடித்து வரலாம். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் எளிதாக கிடைக்கும் மோர் குடிப்பதன் மூலம் உடலில் பல வகையான நன்மைகள் ஏற்படுகிறது. இதனை மசாலா மோராக தயாரித்து அடிக்கடி குடித்து வருவதன் மூலம் பலவகையான நன்மைகள் ஏற்படுகிறது. இதைக் குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

மசாலா மோர் செய்ய தேவையான பொருட்கள்
கெட்டியான புளித்த தயிர், கருவேப்பில்லை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு.

Buttermilk

செய்முறை

மிக்ஸி ஜாரில் கெட்டியான புளித்த தயிரை எடுத்துக் கொண்டு அதனுடன் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்தால் சுவையான மசாலா மோர் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெயில் காலத்தில் தாராளமாக குடிக்கலாம்.

இந்த மசாலா மோர் உடலை குளிர்ச்சிப்படுத்துவதோடு, உடலில் நீர் சத்தை அதிகரிக்கிறது. வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. சருமத்தில் ஏற்படும் நோயை தடுக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் இந்த மசாலா மோரில் இருப்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.