அம்மாடியோவ்.. ஆண்களே.. அந்த உறுப்பு வீங்கி இருக்கா? உஷார்.. நோயும், அறிகுறியும்.! 



prostate-swelling-in-tamil

 

ஆண்களின் உடலில் சிறுநீரகத்தில் இருக்கும் கிளாண்ட் எனப்படும் ப்ராஸ்டேட் சுரப்பியை, தமிழில் சுக்கில சுரப்பி என கூறுவார்கள். அளவில் பாதாம் போல இருக்கும் சுரப்பி, ஆணின் அடிவயிற்றில் சிறுநீரகப்பை - ஆணுறுப்பு இடையே அமைந்து இருக்கிறது. வயதாகும் போது மனிதனின் தலைமுடி நரைக்க தொடங்கியதைப்போல, ஆண்களுக்கு வயது அதிகாக்கும்போது ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் ஏற்படும். ஆனால், இன்றளவில் இளம் வயதினரும் இவ்வாறான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பிரச்சனை சிறுநீரக தொற்று காரணமாக ஏற்படும்.

அறிகுறிகள் இதையும் படிங்க: தூக்கி வீசும் ஆரஞ்சு தோலில், அழகை தரும் துவையல்.. ருசியோ பயங்கரம்.!

தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்தால், எளிய சிகிச்சையிலேயே குணமாகும். வயதான பின்னர் ஏற்படும் இவ்வாறான பிரச்சனை, அதிக தொந்தரவை ஏற்படுத்தும். சிலருக்கு இந்நிலை புற்றுநோய் வரை கூட செல்லலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற தாமதம், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் சிறுநீர் வெளியேற தொடங்குதல், சிறுநீர் கழிதலும் திருப்தியின்மை போன்றவை இதன் முக்கிய அறிகுறியாக கூறப்படுகிறது. 

Prostate

மருத்துவரை நாடுங்கள்

மேலும், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ஆணுறுப்பு வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், தாம்பத்தியத்தில் திருப்தியின்மை, விரைவில் விந்து வெளியேறுதல், விறைப்பு குறைபாடு போன்றவையும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் மேற்கூறிய அறிகுறிகள் இருப்போர் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. மேலும், காய வைத்த பூசணி விதையை தினம் சாப்பிட, ப்ராஸ்டேட் பிரச்சனை கட்டுப்படும். 

இதையும் படிங்க: தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!