லைப் ஸ்டைல் டெக்னாலஜி

குறிப்பா இந்த போன்ல மட்டும் ஆபாச படம் பார்க்க கூடாது! ஏன் தெரியுமா?

Summary:

Problems of watching porn videos in android phones

தொழிநுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும், அது சம்மந்தமான குற்றங்களும், பாதிப்புகளும் ஒருபக்கம் அதிகமாகிக்கொண்டேதான் போகிறது. இன்று அனைவரிடத்திலும் சாதாரணமாக இருக்க கூடிய ஒரு விஷயம் ஸ்மார்ட் போன். பெரியவர்கள் தொடங்கி, சிறியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பலரும் அதிகம் பயன்படுத்துவது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள்தான். புது புது ஆப்கள், இலவச இன்டர்நெட் என அனைத்தும் கிடைத்தாலும், அது சார்த்த பிரச்சனைகளும் இலவசமாகவே கிடைக்கிறது.

குறிப்பா, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெரும்பாலானோர் இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது உண்டு. மேலும் ஆபாச விடீயோக்கள் கொண்ட ஆப்களும் இலவசமாக கிடைக்கிறது. இதுபோன்ற விடீயோக்களை உங்கள் ஆண்ட்ராயிட் போனில் பார்க்கும்போது தேவை இல்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ள எளிதாக வழிவகுக்கும்.

1 . தேவை இல்லாத சந்தாக்கள்
பொதுவாக இணையத்தில் இலவசமாக கிடைக்கும் அனைத்தும் நிச்சயம் இலவசங்கள் இல்லை. நிச்சயம் அதன் பின்புறம் ஏதாவது ஒரு பிசினஸ் கட்டாயம் இருக்கும். இணையத்தில் இலவசமாக கிடைக்கும் ஆபாச விடீயோக்களை நீங்கள் பார்க்கும்போது, உங்களுக்கே தெரியாமல் சட்ட விரோதமான VAS சந்தாக்களை உங்களுக்கே தெரியாமல் உங்கள் எண்ணில் ஆக்டிவேட் செய்யப்படும்.

2 . தேவை இல்லாத ஆப்கள்
நீங்கள் இணையத்தில் ஆபாச படங்கள் பார்க்கும்போது, உங்களுக்கு தெரியாமல் தேவை இல்லாத இணையதளங்கள் திறக்கப்படும். அதன் மூலம் உங்கள் தகவல்களை திருட பயன்படும் ஏதாவது ஒரு ஆப் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படலாம்.

3 . தகவல் திருட்டு
உங்கள் வங்கி கணக்கு, உங்கள் ஈமெயில் முகவரி, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் நீங்கள் ஆபாச இணையதளங்களை தொடரும்போது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், உங்கள் பர்சனல் விஷயங்கள் திருடப்படலாம்.

4 . வைரஸ்
இலவசம், இலவசம் என்று நீங்கள் பார்க்கும் ஆபாச இணையதளங்கள் உங்களுக்கே தெரியாமல், உங்கள் ஸ்மார்ட் போனில் வைரஸை பரப்பி விடலாம். இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போன் கேக்கர்களால் லாக் செய்யப்பட்டுவிடும், அதன்பின்னர் நீங்கள் அதை அன்லாக் செய்ய பணம் கட்டவேண்டி வரும்.


Advertisement