மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்குவதற்கு முன்பு மது அருந்திவிட்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா? உடனே படிங்க!

Summary:

Problems of drinking before sleep in tamil

இன்று நம்மில் பலரும் மதுக்கு அடிமையாக உள்ளனர். சந்தோசம் என்றாலும் பார்ட்டி, துக்கம் என்றாலும் பார்ட்டி இப்படி ஏதாவது ஒரு காரணத்தை வைத்து தினமும் மது அருந்துபவர்கள் ஏராளம். இதில் குறிப்பாக சிலர், இரவில் தூக்கம் வரவில்லை. அதனால் கொஞ்சம் குடிக்கிறேன் என கூறிவிட்டு குடிப்பது வழக்கம்.

இப்படி இரவில் தூங்கும் முன் குடிப்பதனால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா? வாங்க பாக்கலாம்.

பொதுவாக மது அருந்துவதனால் நமது உடலில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது. அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தினால் கிட்னி பாதிப்படைகிறது. மேலும் எண்ணற்ற வியாதிகள் நம்மை தாக்குகிறது.

இரவில் மது அறுத்துவிட்டு தூங்குவது உங்களுக்கு விரைவில் தூக்கம் வர உதவும். ஆனால், போதை தெளிந்து நடு இரவில் எழுந்திரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி தூங்குவதற்கு முன் மது அருந்துவது நள்ளிரவில் உங்களுக்கு இன்சொமேனியாவை ஏற்படுத்தும். அதற்கு பிறகு மீண்டும் தூங்குவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.

எனவே இரவில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் இன்றே இந்த பழக்கத்தை கைவிடுங்கள்.


Advertisement