ஆறாத புண்களையும் ஆற்றும் சக்தி கொண்ட அன்னாச்சி பழம்!,..இன்னும் என்னென்ன குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

ஆறாத புண்களையும் ஆற்றும் சக்தி கொண்ட அன்னாச்சி பழம்!,..இன்னும் என்னென்ன குணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!



Pineapple has the power to heal ulcers in the human body

மனித உடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் சக்தி கொண்ட அன்னாச்சி பழம் குறித்து காண்போம்.

பலா பழத்தை போன்றே வெளிப்பக்கத்தில் கரடு முரடான தோற்றம் கொண்ட அன்னாச்சி பழம் மிகுந்த சுவை கொண்டது. இதன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியது.

அன்னாச்சி பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்துகள் உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டால் சருமம் பளபளப்பாக மாறும். இந்த பழத்திற்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் குணம் உள்ளது.

அன்னாசி பழத்தை சாறாக புழிந்து, சாறுடன் தேன் கலந்து ஒரு மண்டல காலத்திற்கு (48 நாட்கள்) சாப்பிட்டால் தலை வலி, பல் வலி, கண், காது, தொண்டை சம்மந்தபட்ட நோய்கள் வராது. இதன் சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கினால் தொண்டைவலி மற்றும் தொண்டைப்புண் ஆறும்.

அன்னாச்சி பழத்தின் மேலுள்ள இலைகளும் பல்வேறு மருத்துவ குணம் பெண்டது. இதன் இலைச்சாறு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அன்னாச்சி பழத்தின் இலைச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடுவதால் பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையை பிழிந்து சாறு எடுத்து ஒரு டீ-ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து அருந்தினால் இழுப்பு நோய் தீரும்.

அன்னாச்சி பழத்தின் துண்டுகளை தேனில் ஊறவைத்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் கூடும், தோல் பளபளப்பாகும். அன்னாச்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும். இதயக் கோளாறு மற்றும் பலவீனம் குணமாகும்.