லைப் ஸ்டைல்

வீடியோ: கீரிப்பிள்ளையிடம் இருந்து பாம்பை காப்பாற்றிய பன்றிகள்..! வைரலாகும் வீடியோ காட்சி.

Summary:

Pigs saves snake from mangoes viral video

கீரிப்பிள்ளையிடம் இருந்து பன்றிகள் சில நாக பாம்பு ஒன்றை காப்பாற்றியுள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பொதுவாக பாம்பு - கீரிப்பிள்ளை இரண்டிற்கும் ஆகாது என்பது நாம் அனவைருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒன்றுவரான சுசாந்த நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பாம்பும் - கீரிப்பிளையும் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும்நிலையில் அங்கு வந்த பன்றிகள் சில கீரிப்பிள்ளையிடம் இருந்து பாம்பை காப்பாற்றுகிறது.

சுமார் 34 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் முதலில் பாம்பும் - கீரிப்பிளையும் சண்டையிடுகிறது. இதனை பார்த்து அங்கு ஓடிவந்த பன்றி ஒன்று கீரிப்பிள்ளையை அங்கிருந்து விரட்டியடிக்கிறது. ஆனாலும் கீரிப்பிள்ளை மீண்டும் அங்கு வந்து பாம்பை தாக்க முற்படும்போது அங்கு வந்த மேலும் சில பன்றிக்குட்டிகள் அந்த கீரிப்பிள்ளையை அங்கிருந்து விரட்டி பாம்பை காப்பாற்றுகிறது.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement