லைப் ஸ்டைல்

பெண்கள் கொலுசு அணிவதால் இத்தனை நன்மைகள் நடக்கிறதா!

Summary:

Pengal kolusu anivathal ithanai nanmaikal nadakiratha

பொதுவாக உடலின் எல்லா பகுதியிலும் தங்கத்தில் அணியும் நாம் காலில் மட்டும் தங்கத்தில் அணிகலன்களை அணிவது கிடையாது. காரணம் தங்கம் என்பது மகாலட்சுமி என்பதால் அதனை காலில் மட்டும் அணிய மாட்டார்கள். 

இயற்கையாகவே ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி வசப்படுதல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பெண்கள் வெள்ளி கொலுசை அணியும் போது வெள்ளி கொலுசானது குதிக்கால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை வலுப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

மேலும் வெள்ளி நகைகளை அணியும் போது நம் ஆயுளை விருத்தி அடைய செய்வதுடன், உடல் சூட்டை குறைத்து சருமத்தை குளிர்ச்சியடைய செய்கிறது. மேலும் சிறுவயதில் குழந்தைகளுக்கு கொலுசு அணிவதற்கு முக்கிய காரணம் அதிலிருந்து ஏற்ப்படும் சத்தத்தின் மூலம் குழந்தையின் ஒவ்வொரு அசைவினையும் அறிந்து கொள்ள கொலுசு உதவும் என்பதால் தான் கொலுசு அணிவிக்கப்படுகிறது. 


Advertisement