ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
உங்கள் வீட்டு வெங்காயத்தில் கருப்பு கோடுகள் இருக்கா? ஆபத்து மக்களே... அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
சமையலறையில் அத்தியாவசியமான வெங்காயம் சுவைக்கு மட்டுமல்ல, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சில சமயம் வெங்காயத்தில் தோன்றும் கருப்பு கோடுகள் நுகர்வோரின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்
வெங்காயம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, எடை குறைக்க உதவுகிறது, எலும்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தை எளிதாக்குகிறது. இதனால் தினசரி உணவில் வெங்காயம் முக்கிய இடம் பெற்றுள்ளது.
கருப்பு புகை போன்ற கோடுகள் என்ன?
வெங்காயத்தை உரிக்கும் போது சில நேரங்களில் கருப்பு தூசி போன்ற கோடுகள் தோன்றும். இவை மண் அல்லது புகை போலத் தெரிந்தாலும், உண்மையில் Aspergillus niger என்ற பூஞ்சையால் ஏற்படும் பாதிப்புகளாகும்.
இதையும் படிங்க: சிக்கனை இவர்கள் மட்டும் தோலுடன் சாப்பிட கூடாது! யார் யாரெல்லாம் தெரியுமா? மீறினால் இந்த ஆபத்து நிச்சயம்....
இதனை சாப்பிடலாமா?
அனைத்து கருப்பு கோடுகளும் Fungal infection என்பதில்லை. வெங்காயத்தை தண்ணீரில் கழுவும்போது அவை மறைந்து, வெங்காயம் சுத்தமாக மின்னினால் அது சாப்பிட பாதுகாப்பானது. ஆனால் கோடுகள் அப்படியே இருந்தால், அது பூஞ்சை தொற்று என அர்த்தம்.
ஆபத்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை
பூஞ்சை வெங்காயத்தின் வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உள்ளிருக்கும் தசையிலும் பரவி இருக்க வாய்ப்பு உண்டு. அதை சமைத்தாலும் அழிப்பது கடினம். குறிப்பாக சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனால் அதிக ஆபத்தில் சிக்கக்கூடும்.
ஆகவே, வெங்காயம் வாங்கும் போது கருப்பு கோடுகள் உள்ளதை தவிர்த்து, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான வெங்காயத்தை தேர்வு செய்வது நல்லது. உணவில் கவனமாக இருக்கும்போது தான் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
இதையும் படிங்க: உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மாதுளம் பழம்! யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...