வெள்ளிக்கிழமை இந்த 5 பூக்களை மகாலட்சுமிக்கு சூடினால் செல்வ வலம் பெருகும்!



mahalakshmi-friday-special-flowers-benefits

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாட்டிற்கான மிகச் சிறப்பான நாளாக கருதப்படுவதால், அந்த நாளில் செய்யப்படும் பூஜைகள், அர்ப்பணிப்புகள், வழிபாடுகள் அனைத்தும் செல்வ வளம் மற்றும் ஆன்மிக அமைதியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மகாலட்சுமி விரும்பும் மலர்களை படைத்து வழிபடுவது பலரின் வாழ்க்கையில் நன்மைகளை ஏற்படுத்துகிறது.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாட்டின் சிறப்பு

செல்வ தெய்வமான மகாலட்சுமியின் அருளைப் பெற வெள்ளிக்கிழமை மிகவும் மங்களகரமான நாள். இந்த நாள் குடும்ப வளம், மகிழ்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை வழங்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக லட்சுமிக்கு விருப்பமான மலர்களைப் பயன்படுத்தி வழிபடுவதால் வீட்டில் ஆயுள், ஆரோக்கியம், செல்வம் போன்றவை தங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வியாழன் பிரதோஷமான இன்று சிவபெருமானை இப்படி வழிபடுங்க! வாழ்க்கை வளம் பெரும்....

மகாலட்சுமிக்கு பிரியமான 5 மலர்கள்

1. மல்லிகை
மகாலட்சுமிக்கு மணம் மிக்க மலர்கள் மிகப் பிடித்தவை. வெள்ளை நிறம் அமைதியின் அடையாளம் என்பதால் மல்லிகை மலரை படைப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, அன்பு நிறைந்து இருக்கும். மேலும் பொருளாதார உயர்வு, வெற்றியிலும் குறைபாடுகள் இல்லாமல் இருக்கும்.

2. தாமரை மலர்
தாமரை மலர் மகாலட்சுமியின் பிரதான சின்னமாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் தாமரை படைத்து வழிபட்டால் செல்வம், அமைதி, நிம்மதி அதிகரிக்கும். பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்ந்து, திருமண வாழ்க்கை இனிமையாக அமையும்.

3. சாமந்திப் பூ
சாமந்திப் பூவின் மங்களகரமான நிறம் மற்றும் மணம் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை ஈர்க்கும். இந்த மலரை படைப்பதால் வீட்டில் நன்மைகள் அதிகரித்து, தீய சக்திகள் விலகும். அதிர்ஷ்டம் தொடர்ந்து வர வழி வகுக்கும்.

4. செம்பருத்தி
சிவப்பு நிற செம்பருத்தி பலம் மற்றும் ஆற்றலின் அடையாளம். மகாலட்சுமிக்கு இதை படைத்தால் செல்வம், அழகு, வலிமை ஆகியவை அதிகரிக்கும். லட்சுமி பூஜை நேரங்களில் செம்பருத்தி பயன்படுத்துவது நிறைவான வாழ்க்கை வழங்கும்.

5. ரோஜா
சிவப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தவை. ரோஜா மலரை படைத்து வழிபட்டால் வீட்டில் அமைதி நிலைத்து, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக பெண்கள் ரோஜா மலரை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் இந்த ஐந்து மலர்களையும் மகாலட்சுமிக்கு படைத்து வழிபடுவது, செல்வ உயர்வும், குடும்ப நலனும் தொடர்ந்து வளரச் செய்யும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கையுடன் செய்யப்பட்ட வழிபாடு மனிதனின் மனதை தூய்மையாக்கி, வாழ்வில் நிலையான வளம் தேடி வருவதற்கான பாதையை அமைத்துத் தரும்.