காலை நேரத்தில் இந்த மாதிரி உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாதாம்.. ஏன் தெரியுமா.?

காலை நேரத்தில் இந்த மாதிரி உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாதாம்.. ஏன் தெரியுமா.?


Morning healthy foods

நம் வாழ்க்கையில் அன்றாட நாள் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதுற்கு காலை உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Food

காலை உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் அந்த நாளின் முழு ஆற்றலுக்கும் போதுமானதாக இருக்க வேண்டும். சில உணவுகள் காலை நேரத்தில் எடுத்துக் கொள்ளவே கூடாது. அவை எந்தெந்த உணவுகள் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

முதலில் பழச்சாறு நாம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கவே கூடாது. ஆனால் ஒரு சிலர் எழுந்தவுடன் பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இது பெரும்பாலும் வயிற்றுப் புண்ணை ஏற்படுத்தும் மற்றும் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

Food

பின்பு தேநீர், காபி, சுவையூட்டப்பட்ட தயிர், பான் கேக் போன்றவற்றை காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை வயிற்றில் இருக்கும் அமிலத்தை அதிகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதால் ஆரோக்கியமான உணவையே தினமும் உண்ணலாம்.