வீட்டில் ஈக்கள் தொல்லை தாங்கவில்லையா?.. விரட்டியடிக்க எளிய டிப்ஸ்.!



Monsoon Season: Simple Natural Home Remedies to Get Rid of Houseflies Effectively

ஈக்களை விரட்டியடிக்கும் எளிமையான வழிமுறை குறித்து காணலாம்.

மழைக்காலம் என்றாலே பருவகால நோய் தொற்றுகளைப் போல ஈக்களின் தொல்லையும் கடுமையாக அதிகரித்து விடும். வீட்டில் சமையலறை முதல் குப்பை தொட்டி வரை ஈக்கள் இயற்கையாக இக்காலத்தில் அதிகம் காணப்படும். குறிப்பாக உணவு கழிவுகள், குப்பை தொட்டி, தண்ணீர் தேங்கிய இடங்கள், இனிப்பு வாசனைகள் ஆகியவை ஈக்களை வீடு நோக்கி ஈர்க்கின்றன. இதனை தவிர்க்க சில எளிய முறைகளை நாம் பின்பற்றலாம். 

ஈக்களை விரட்டும் எளிய வழிகள்:

ஒரு பவுலில் ஆப்பிள் சீடர் வினிகர் ஊற்றி, பிளாஸ்டிக் கவரை கொண்டு மூடி நடுப்பகுதியில் துளையிட்டால் ஈக்கள் அதனால் ஈர்க்கப்பட்டு வினிகர் கலவையில் விழுந்து இறந்துவிடும். அதேபோல லாவண்டர், பெப்பர்மின்ட், யூகலிப்டஸ் போன்ற எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு வீடு முழுவதும் தெளிக்கலாம். இது ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்தும். அதேபோல எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதில் எட்டு கிராம்பு வைத்து வீட்டில் ஈக்களை விரட்டலாம். 

இதையும் படிங்க: தாங்க முடியாத கொசுத்தொல்லை.. தப்பிக்க எளிமையான வழிகள் இதோ.!

health tips

சமையலறை சுத்தம்:

ஆரஞ்சு பழத்தோலை கிச்சனில் தொங்கவிட அந்தப் பக்கம் ஈக்கள் வராது. இஞ்சியை பொடியாக செய்து ஈக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அந்த நீரை தெளிக்க ஈக்கள் வெளியேறும். உப்பு, மஞ்சள் சேர்த்து நீரில் கரைத்து வீடெல்லாம் தெளிக்க ஈக்கள் வராது. துளசி அல்லது புதினா வாசனைகளுக்கும் ஈக்கள் வீட்டில் அண்டாது. முடிந்தளவு சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

இதையும் படிங்க: கலப்பட வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?.. வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிய டிப்ஸ்.!