ஆண்மையை நிரூபிக்க இப்படியும் செய்வார்களா? மனைவிக்கு ஷாக் கொடுக்க கணவனின் விசித்திர செயல்!!

ஆண்மை இல்லாதவர் எனக் கூறிய மனைவியை பழிவாங்குவதற்காக புதிய முயற்சியில் ஈடுபட்ட கணவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தை சேர்ந்தவர் விபாவசுக்கும் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அனுஷா சென்னைக்கு வந்து தனது பெற்றோர் வீட்டிலேயே தங்கி விட்டார். இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சித்தும் அது வீணானது.
இதனிடையே விபாவசுவிடம் விவாகரத்து கேட்டு அனுஷா மனு செய்திருந்தார். அந்த மனுவில் தனது கணவர் ஆண்மை இல்லாதவர் என குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தை தன் வீட்டிலும் அனுஷா கூறினார். இதனால் அனுஷா குடும்பத்தாரும் அடிக்கடி விபாவசுவை ஆண்மை இல்லாதவன் என இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்து ஆத்திரம் அடைந்த விபாவாசு, தான் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச படத்தை அனுஷாவின் உறவுப்பெண் ஒருவருக்கு செல்போன் மூலம் அனுப்பினார்.
மேலும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீசார் விபாவசு அனுப்பியதாக கூறப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தனர். உறவுகார பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஐதராபாத் சென்று விபாவசுவிடம் விசாரணை நடத்தினர். அதில், அனுஷாவும், அவரது குடும்பத்தினரும் தன்னை மிகவும் அவமானப்படுத்தி கேவலமாக பேசியதாகவும், அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழலில் அடைத்தனர்.