லைப் ஸ்டைல்

எங்கு முத்தம் கொடுத்தாள் என்ன அர்த்தம்? இனியாவது தெரிந்த்து செயல்படுங்கள்!

Summary:

Meanings of kiss spots and places to kiss

இரு இதயங்கள் ஒன்றிணைவதில் முத்தம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சத்தம் இல்லாமல் குடுக்கும் முத்தம் உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அணைத்து சண்டைகளையும் ஒரு நொடியில் இல்லாமல் செய்துவிடும்.

நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்கள் என்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். முத்தம் குடுக்கும் போது உங்கள் துணையை மென்மையாக கையாளுங்கள். அவர்கள் மீது வன்முறையில் ஈடுபடாதீர்கள்.

காதலியிடம் கொஞ்சம் ரொமான்ஸாகப் பேசிக் கொண்டே இருங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் மேல் தானாகவே அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிவிடும்.

அந்த சமயத்தில் நீங்கள் கொடுக்கும் முத்தம் அவர்களுடைய மனதில் நங்கூரம் போல் பாய்ந்துவிடும்.

முத்தம் எங்கெங்கு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு, முத்தம் கொடுங்கள்.

உதட்டு முத்தம்

நான் உன்னை எனது உயிரினும் மேலாக நேசிக்கிறேன் என்றும், நான் எனது காதலை உண்மையாக உன்னிடம் வெளிப்படுத்துகிறேன் என்றும் இதற்கு அர்த்தம்.

கைகளில் முத்தம்

பொதுவாக கைகளில் கொடுக்கப்படும் முத்தமானது மரியாதை நிமித்தமாக கொடுக்கப்படுவது. வயதில் சிறியவர்கள் . பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் மரியாதை நிமித்தமாக இந்த முத்தத்தினை குடுக்கலாம்.

கண்ணைத் திறந்து கொண்டு முத்தம் தருதல்

உங்கள் துணை அவரது கண்களை திறந்துகொண்டே உங்களுக்கு முத்தம் கொடுத்தல் அவர் உங்களை மேலும் திருப்திப்படுத்த நினைக்கிறார் என்றும், மேலும் உங்களை அவர் ரசிக்கிறார் என்றும் அர்த்தம்.

கண்களை மூடி கொடுத்தல்

கண்களை இருவரும் மூடிக்கொண்டு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்துக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்

கன்னத்து முத்தம்

கன்னத்தில் கொடுக்கும் முத்தத்துக்கு நாம் இருவரும் நல்ல காதலர்கள் எகன்பதையும் தாண்டி, நான் உன்னோடு நல்ல நட்பில் இருக்க வேண்டுமென விரும்புவதாக அர்த்தம்.

நெற்றி முத்தம்

பொதுவாக வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் இந்த விதமான முத்தத்தினை கொடுப்பார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் ஏன் வாழ்நாள் முழுவதும் நீ என்னுடன் இருக்கவேண்டும் என்று அர்த்தம்.

கண்களில் முத்தம்

இதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம். இந்த முத்தம் அன்பின் மிகுதியாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுக்கப்படுவதாகும்.


Advertisement