சித்தர்களின் அபூர்வ மூலிகை தண்ணீர் விட்டான் கிழங்கு.! இதை எப்படி பயன்படுத்தலாம்.!?

சித்தர்களின் அபூர்வ மூலிகை தண்ணீர் விட்டான் கிழங்கு.! இதை எப்படி பயன்படுத்தலாம்.!?



Many disease cured by thannervittan kizangu

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல வகையான ருசியான உணவு பொருட்கள் வந்துவிட்டாலும், அந்த கால கட்டத்தில் கிடைத்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தற்போது அதிகம் கிடைப்பதில்லை. குறிப்பாக தண்ணீர் விட்டான் கிழங்கு என்று அழைக்கப்படும் கிழங்கை நம் முன்னோர்களும், சித்தர்களும் அதிகமாக மருந்துகளுக்கும், உணவுகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். அந்த அளவிற்கு இந்த கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்று கூறப்பட்டு வருகிறது.

கிழங்கு

மேலும் தண்ணீர் விட்டான் கிழங்கு பெண்களுக்கான அதிசய கிழங்கு என்றும் கூறப்பட்டுள்ளது. மிகவும் குளிர்ச்சி நிறைந்த தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியாக நாட்டு மருந்து கடைகளில் மருந்தாக அதிகம் விற்கப்படுகிறது. இந்த தண்ணீர் விட்டான் கிழங்கில் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல், மூல பிரச்சினை, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம். பொடியாக நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் இதை பாலில் கலந்தும் குடித்து வரலாம்.

இனிப்பு தன்மையும், குளிர்ச்சியும் நிறைந்த தண்ணீர் விட்டான் கிழங்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, அதிக ரத்தப்போக்கு போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனையை சரி செய்து விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

கிழங்கு

மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கிழங்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் கை, கால் எரிச்சல், ஆறாத நாள்பட்ட புண்கள் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய தண்ணீர்விட்டான் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நன்மையை அளிக்கிறது.