புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
மாம்பழத்தை வைத்து புது ரெசிபி... சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி?..!
மாம்பழத்தை வைத்து அருமையாக மாம்பழ பாயசம் எப்படி செய்வது என்பது பற்றியது தான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
கண்டன்ஸ்டு மில்க் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - அரை கப்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
நெய் - 1 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - ஒரு தேக்கரண்டி
அரிசிக்குருணை - 2 தேக்கரண்டி
தித்திப்பான மாம்பழக்கூழ் - ஒரு கப்
செய்முறை :
★முதலில் முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்தெடுக்க வேண்டும்.
★மீதமுள்ள நெய்விட்டு அரிசிக்குருணையை லேசாக வறுத்து அதனை பாலில் இட்டு காய்ச்ச வேண்டும்.
★அடுத்து அரிசி நன்றாக வெந்ததும், கண்டன்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
★பின் கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி மாம்பழக் கூழ் சேர்க்க வேண்டும்.
★இறுதியாக அனைத்தும் கொதித்ததும் இறக்கி முந்திரி, திராட்சை சேர்த்தால் மாம்பழ பாயசம் தயாராகிவிடும்.