இந்தியா சினிமா

அடேங்கப்பா.! இந்த வயசுல இப்படி ஒரு ஆசையா? தள்ளாடும் 106 வயது பாட்டியின் வாழ்நாள் கனவை நினைவாக்கிய பிரபல நடிகர், வைரலாகும் வீடியோ.!

Summary:

mahesh babu meet 106 year old lady

 நடிகர் மகேஷ்பாபு தனது 106 வயதான தீவிர ரசிகை ஒருவரை நேரில் பார்த்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடிகர், நடிகைகளுக்கு அனைத்து வயதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு சிலர் தங்களை ஈர்த்த அந்த நடிகர்களை வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்துவிடவேண்டும் என்பதையே தனது வாழ்நாள் ஆசையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் இதனை போலவே ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த ரேலங்கி சத்யவதி என்ற 106 வயதான பாட்டிக்கு நடிகர் மகேஷ் பாவை பார்ப்பதே வாழ்நாள் கனவாக இருந்தது.

                

அவரின் கனவை தெரிந்துகொண்ட நடிகர் மகேஷ்பாபு, தான் நடித்து கொண்டிருக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்தப் பாட்டியை அழைத்து வரக் கூறியுள்ளார்.மேலும் அவரை நேரில் சந்தித்து அவருடன் அமர்ந்து  பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் பரவிவருகின்றன.

           

 


Advertisement