செம்ம மாடர்னாக வந்து ரசிகர்களை வியக்கவைத்த செந்தில் - ராஜலக்ஷ்மி

செம்ம மாடர்னாக வந்து ரசிகர்களை வியக்கவைத்த செந்தில் - ராஜலக்ஷ்மி


madern dress -senthil rajalakshmi

கடந்த ஆண்டு  விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல வித்யாசமான நாட்டுப்புற பாடல்களை பாடி  பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது. 

rajalakshmi

சூப்பர் சிங்கர் டைட்டில்  வென்றதும் செந்தில் தற்போது வளர்ந்து வரும் பாடகர்களில் முக்கிய நட்புற பாடகர்களாக வலம் வருகிறார்.  இவர்கள் இருவரும் வெளிநாடு வரை சென்று பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்கள் அந்நிகழ்ச்சிக்கான `மேக் ஓவர் ரவுண்ட்’ எனும் டாஸ்கிற்காக இருவரும் இதுவரை பார்த்திராத அட்டகாசமான கெட் அப்பில் வந்து கலக்கினார்கள்.இதுவரை வேஷ்டி, சேலையில் மட்டுமே நாம் பார்த்திருந்த செந்தில் - ராஜலக்ஷ்மி செம்ம மாடர்னாக வந்து மேடையில் இருந்தவர்களை வியக்கவைத்தனர். இவர்களின் இந்த புது கெட்  புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக  பரவி வருகிறது.