சனி பகவானின் வக்கிர நிலையில், இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண அதிஷ்டமா.!?lord-saturn-effects-for-this-three-people-of-the-zodiac

சனி பகவான் நவ கிரகங்களில் ஒன்றானவர். இவர் மற்றக் கிரகங்களுக்கு நீதிமானாகவும், கரும நாயகனாகவும் விளங்கக்கூடியவர் ஆவார். நாம் செய்யும் செயலுக்கு தகுந்தாற்போல் பலன்களை அள்ளித் தருபவர் தான் சனி பகவான். இவரின் சொந்த ராசியான கும்பராசியில் தற்போது பயணம் செய்து கொண்டிருக்கிறார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

நவகிரகங்களில் ஒன்றான சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் ஆவார். சனிபகவான் இந்த ஆண்டு கும்ப ராசியில் பயணம் செய்து விட்டு இனிமேல் வரும் 2025 ஆம் ஆண்டு தான் இடமாற்றம் செய்கிரார். இவரின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். 

Lord Saturnஜூன் மாதம் முதல் கும்பராசியில் இருந்து வக்கிர நிலையில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த பயணம் நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்பு கொண்டிருக்கும். இவரது இந்த வக்கிர நிலைப்பயணம் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப் போகிறது. அது என்னென்ன ராசி என்று பார்க்கலாம்.

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திடீரென பண வரவு கிடைக்கும். ஏனெனில் சனி பகவான் இந்த ராசியில் 11- வது வீட்டில் வக்கிர நிலையில் பயணிக்க உள்ளார். வரும் ஜூன் மாதத்தில் இருந்து நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும். 

Lord Saturnரிஷப ராசியில் பத்தாம் இடத்தில் வக்கிர நிலையில் பயணிக்க இருக்கிறார். இந்த ராசியிலும் ஜூன் மாதத்தில் இருந்து பயணம் ஆரம்பிப்பதால் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடிந்தது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஜூன் மாதத்தில் இருந்து சனிபகவானால் உங்களுக்குப் பண அதிஷ்டம் அடிக்க போகிறது.

விருச்சிக ராசியில் நான்காம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் சனி பகவான் பயணம் செய்யப் போகிறார். இதனால் பண வரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கலாம். இதனால் நல்ல முன்னேற்றம் தொழிலில் இருக்கும். கணவன் மனைவிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.