சோம்பேறித்தனத்தால், இப்படி எல்லாம் நடக்குமா.?! தெரிந்து கொள்ளுங்கள்.!lazyness-problems-of-human-health

நாம் தினமும் ஓய்வு எடுக்கும் பெயரில் சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரே இடத்தில் ஒக்காந்து மொபைல் நோண்டுவது, டிவி பார்ப்பது, சாப்பிட்டவுடன் படுத்து உறங்குவது போன்ற பழக்கங்கள் சோம்பேறித்தனதை அதிகப்படுத்துகிறது. 

பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பது புகை பிடிப்பதற்கு சமமான ஒரு செயலாகும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் காலையில் எழுந்ததில் இருந்து பல மணி நேரங்கள் கார்களிலும், பேருந்துகளிலும் அமர்ந்திருக்கிறோம். அலுவலகத்திலும் சென்று அமர்ந்து தான் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளது. இதனால் ஒரே இடத்தில் ரொம்ப நேரம் அமர்ந்திருந்தால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

Lazyness

நம் சோம்பேறித்தனத்தால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடும். இதன் மூலம் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படலாம். ஆய்வாளர்கள் நீண்ட நேரம் நிற்கும்போது முதுகில் ஏற்படும் அழுத்தங்களை விட, அமர்ந்திருக்கும் போது ஏற்படும் அழுத்தங்கள் அதிகம் என்கின்றனர். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து, தலை குனிந்து வேலை செய்தால் இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவீர்கள்.

எந்த ஒரு வேலையையும் 6 முதல் 8 மணி நேரங்களுக்கு மேல் அமர்ந்தபடி செய்தால், அதன் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும் மற்றும் சமாளிப்பது கடினம் என்று இதய நோய் நிபுணர் நவீன் ராஜ்புரோகித் அறிவுறுத்துகிறார். உங்கள் கழுத்து, முதுகு, தோள்பட்டை மற்றும் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

Lazyness

சோம்பேறியின் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். இதன் மூலம் உடல் பருமன், டைப் டு டயாபடீஸ், இதய நோய்கள், ஹைப்பர் டென்சன், மெட்டபாலிக் நோய்க்குறி, தூக்கப் பிரச்சனை மற்றும் மனநல பிரச்சனைகள் வரக்கூடும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் கலோரிகள் எரிக்கப்படுவது குறையும். 

ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 20 நிமிடங்களுக்கும் குறைவாக சுறுசுறுப்பான உடல் இயக்கத்தில் ஈடுபடுகிறார்கள் என்று இன்னொரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதேபோல், 25 சதவிகிதத்திற்கும் அதிகமான நபர்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இந்தியாவில் மட்டும் தான் என்கின்றனர். இந்த சோம்பேறித்தனத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே 30 நிமிடங்களுக்கு ஒரு முறை காலாற நடந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.