விபச்சாரத்தால் ஏற்பட்ட தகராறு; மெரினாவில் கலைச்செல்வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்!

விபச்சாரத்தால் ஏற்பட்ட தகராறு; மெரினாவில் கலைச்செல்வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்!



kalaiselvi murder case

சென்னை மெரினா பீச்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு மணலில் அரைகுறையாக மூடப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசதுக்கம் காவல்துறையினர் பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது அந்தப் பெண் நிர்வாணமாக மணலில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பின் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அழைத்துவந்த யாரோ தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணையை துவங்கினர். அப்போது அந்தப் பெண் புதைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் அவருடைய செல்போன், செருப்பு மற்றும் ஒரு ஆணின் செருப்பு மேலும் அந்த பெண்ணின் உடைகள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

kalaiselvi murder case

அந்தப் பெண்ணின் செல்போனை வைத்து சோதனை செய்ததில் அவர் மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி என்பது தெரியவந்துள்ளது. உல்லாசமாக இருக்கும்போது ஏற்பட்ட தகராறில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்ததில், கலைச்செல்வி அடிக்கடி பிரேம்குமார் என்ற ஆட்டோ டிரைவருடன் பேசியிருப்பது தெரியவந்தது.. அதனைத்தொடர்ந்து பிரேம்குமாரையும், அவரது நண்பர் சூர்யா என்பவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து கலைச்செல்வியை கொலை செய்து கடற்கரை மணலில் புதைத்தது உறுதியானது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் திருவல்லிக்கேணியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கைதான அவரது நண்பர் சூர்யா பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். 

kalaiselvi murder case

இந்நிலையில் அன்று நடந்தது என்ன? கலைச்செல்வியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து ஆட்டோ டிரைவர் பிரேம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

"கடந்த சில மாதங்களாக மதுரையை சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் விபச்சாரம் செய்து வந்தார். அவரிடம் நாங்கள அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்துள்ளோம். ஆனால் அவர் மெரினாவில் தொழில் துவங்குவதற்கு முன்பு பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் விபசார தொழில் செய்துவந்தார்கள். கலைச்செல்வி வருவதற்கு முன்பு நாங்கள் அவர்களிடம் தான் உல்லாசமகா இருக்க செல்வோம்.

கலைச்செல்வி வந்ததால் பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கும் விபசார தொழில் பாதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் எங்களிடம் சண்டை போட்டார்கள். கலைச்செல்வியை சந்திக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். இதனால் நாங்கள் கலைச்செல்வியுடனான தொடர்பை துண்டித்தோம்.

கடந்த சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரைக்கு வந்த கலைச்செல்வி எங்களை அழைத்தார். நாங்கள் அனைவரும் நீச்சல்குளம் அருகே கடற்கரையில் அமர்ந்து மது அருந்தினோம். பின்னர் உல்லாசமாக இருந்தோம்.

இனிமேல், ‘மெரினாவில் நீ விபசாரம் செய்யக்கூடாது’ என்று கலைச்செல்வியை மிரட்டினோம். அப்போது தன்னுடன் உள்ள தொடர்பை துண்டிப்பது ஏன் என்பது பற்றி கலைச்செல்வி எங்களுடன் தகராறில் ஈடுபட்டார்.  இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் பீர்பாட்டிலால் கலைச்செல்வியின் தலையில் அடித்தோம். அவரது வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி வீசினோம். இதில் அவர் இறந்து போனார்.

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த நாங்கள் வேறுவழியின்றி கடற்கரை மணலில் குழி தோண்டி உடலை புதைத்து விட்டு சென்றுவிட்டோம் அவசரத்தில் சிறியதாக தோன்றியதால் மாட்டிக்கொண்டோம்" இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.