பிரபல நடிகைக்கு ஆடையின்றி டிவி பார்ப்பது தான் பிடிக்குமாம்! யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகைக்கு ஆடையின்றி டிவி பார்ப்பது தான் பிடிக்குமாம்! யார் அந்த நடிகை தெரியுமா?



jenifer-aniston-likes-watching-tv-naked

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் நிர்வாணமாக டிவி பார்ப்பது தான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் மிகவும் பிடித்திருக்கும். அதை திரும்பத் திரும்ப செய்வதற்கு அவர்கள் ஆவலோடு இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தான் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தான் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

ஜெனிபர் அனிஸ்டன் ஒரு அமெரிக்க நடிகை ஆவார். அவர் 1990களில் அமெரிக்க நகைச்சுவைத் தொடரான பிரண்ட்ஸ் தொடரின் ரேச்சல் கிரீன் கதாப்பாத்திரத்தின் மூலமாகப் பிரபலமானார். அந்தக் கதாப்பாத்திரத்திற்காக அவர் ஒரு எம்மி விருது, ஒரு கோல்டன் குளோப் விருது மற்றும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

actress jenifer

49 வயதான ஜெனிபர் அனிஸ்டன் சில நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டார். நடிகை அளித்த பதில் மிகவும் நகைப்பிற்குரியதாக இருந்ததால் அந்த அரங்கமே அதிர்ந்தது.

அதில் ஒரு கேள்வியானது "நீங்கள் பணம் சம்பாதிப்பதற்காக எந்த அளவிற்கு மோசமான செயலை இதுவரை செய்துள்ளீர்கள்?" என்று கேட்டதற்கு, அவர் "தான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது 10 டாலர் பெறுவதற்காக என்னுடைய முடியை வெட்டிக் கொண்டேன்" என பதிலளித்தார்.

actress jenifer

அடுத்து அவரிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியானது, "நீங்கள் உடலுறவு கொள்வது, குளிப்பது மற்றும் நீச்சல் செய்யும் சமயங்களை தவிர மற்ற எந்த சமயத்தில் நிர்வாணமாக இருக்க விரும்புவீர்கள்?" என கேட்கப்பட்டது. அதற்கு எந்தவித தயக்கமும் இன்றி பதிலளித்த ஜெனிபர், "தான் டிவி பார்க்கும்போது நிர்வாணமாக இருப்பதை விரும்புவதாக" தெரிவித்தார்.

இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர், "நீங்கள் எப்பொழுதுமே அதே கோலத்தில் நான் டிவி பார்ப்பீர்களா?" என கேட்டதற்கு "இல்லை, இல்லை.. படுக்கை அறையில் தூங்கும் பொழுது மட்டுமே அந்த கோலத்தில் டிவி பார்ப்பதை விரும்புவேன்" என விளக்கம் அளித்தார்.