வீட்டில் ஜவ்வரிசி சும்மா இருக்கா?.. வித்தியாசமான சுவையில் ஜவ்வரிசி கேசரி செய்து அசத்தலாம் வாங்க..!!

வீட்டில் ஜவ்வரிசி சும்மா இருக்கா?.. வித்தியாசமான சுவையில் ஜவ்வரிசி கேசரி செய்து அசத்தலாம் வாங்க..!!



javvarishi-kesari-tamil

ஜவ்வரிசி கேசரி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

பொதுவாக கேசரி என்றாலே ரவை மற்றும் சேமியாவை வைத்து தான் செய்வீர்கள். ஆனால் இன்று வித்தியாசமாக ஜவ்வரிசியில் எப்படி கேசரி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

சர்க்கரை - 150 கிராம்
ஜவ்வரிசி - 1/4 கிலோ
குங்குமப்பூ - ஒரு கிராம்
ஏலக்காய் தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - தேவைக்கேற்ப
நெய் - தேவையான அளவு
திராட்சை - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் விட்டு முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

★பின் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

★அடுத்து ஜவ்வரிசியை 4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி ஜவ்வரிசியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

★ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, அதில் வடிகட்டிய ஜவ்வரிசி போட்டு நன்கு கிளற வேண்டும்.

★15 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிய பின், சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.

★அடுத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி,ஊற வைத்த குங்குமப்பூவை சேர்த்து கிளற வேண்டும்.

★சர்க்கரை நன்கு திக்கான பதத்திற்கு வரும்போது வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான ஜவ்வரிசி கேசரி தயாராகிவிடும்.