காலை உணவு அந்த விசயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

காலை உணவு அந்த விசயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்



Importance of breakfast

இன்றைய கார்ப்பரேட் உலகில் காலை உணவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது . இரவில் தாமதமாக தூங்க செல்வதே இதற்கு காரணம்.

காலை உணவின் முக்கியத்துவத்தை பாருங்கள் :

Latest tamil news

தசைகளை மெருகேற்றி வளர்ப்பதை இலக்காக வைத்திருந்தால் அதற்கு கண்டிப்பான உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டம் மிகவும் அவசியமானது. அதனை செயல்படுத்தினால் விரைவில் அந்த இலக்கை எட்ட முடியும்.

ஒரு மனிதனின் அன்றாட வாழ்வில் உணவு என்பது இல்லை என்றால் உயிர் வாழ்வது என்பது கனவில் கூட சாத்தியமாகாது.

மனிதனின் வாழ்நாளில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக காலை உணவு என்பதை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.

இரவு உறக்கம் முடிந்த பின் எழுந்த சில மணி நேரத்தில் உணவு அருந்துவது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதோடு, புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

அந்த வகையில் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சம விகித கலோரிகளோடு உட்கொள்வது தசை வளர்ச்சியை தூண்டுவதோடு, அதனை மாற்றியமைக்கும் வல்லமையையும் கொண்டுள்ளது.

இந்தக் கலோரிகள் உடலிலுள்ள தசையின் அடியில் இருக்கும் கொழுப்புகளின் சேமிப்பு குறையாமல், உடலின் சரி பங்கு வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலையும் பெற வழிவகை செய்கிறது.

எனவே காலை உணவு தசை வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றுகிறது.

தசைகளை வளர்க்க எளிதாக கிடைக்கும் உணவு வகைகளில் ஒன்று ஓட்ஸ். இதை தொடர்நது சாப்பிட்டு வருவது தசைகளை மென்மேலும் விருத்தியடைய உதவுகிறது.

அத்துடன் உடலின் சீரான வளர்ச்சிக்கும், இதய சம்பந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.