லைப் ஸ்டைல்

மனைவியின் ஆபாச படத்தை வெளியிட்டு விபச்சாரத்திற்கு விளம்பரம் செய்த கணவர்! மனைவி அதிர்ச்சி முடிவு

Summary:

husband sent wife glamour photos in whatsapp

வாட்ஸ்அப்பில் மனைவியின் ஆபாச படத்தை வெளியிட்டு விபச்சாரத்திற்கு கணவன் விளம்பரம் செய்ததால் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் கஸ்பாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் (35). குமார் சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக எடுத்து வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். அதனுடன் ரூ500 கொடுத்தால் இந்த பெண் விபச்சாரத்திற்கு வருவார் என்று கூறி மனைவியின் மொபைல் எண்ணையும் சேர்த்து அனுப்பியுள்ளார். 

இந்த தகவலானது பல வாட்ஸ்அப் குரூப்களில் பரவ துவங்கியது. இதைப்பார்த்த சிலர் குமாரின் மனைவிக்கு போன் செய்து விபச்சாரத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த குமாரின் மனைவி தற்கொலை செய்துகொள்ள குடிவு செய்துள்ளார். மேலும் தந்து கணவரையும் போலீசில் சிக்க வைக்க வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளார்.

 à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

இதனைத்தொடர்ந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வேலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தை நெருங்கியதும் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரது கையில் பூச்சிக்கொல்லி மருத்து வைத்திருந்ததால் அவர் அதை குடித்திருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர். உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் குமார் செய்த அட்டூழியங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்தது. பின்னர் இதுகுறித்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Advertisement