லைப் ஸ்டைல் காதல் – உறவுகள்

மனைவி எதிரே கணவருக்கு நேர்ந்த விபரீதம்...!

Summary:

husband-killed-infront-of-pregnant-women

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்கள் முன்னாள் காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டார்கள். இதில் அந்த பெண் உயர்சாதி எனவும், அந்த பெண்ணின் தந்தை ஆறு மாதங்கள் பொறுத்து அந்த பையனை கொலை செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த காதலன் பெயர் பினராய் மற்றும் காதலியின் பெயர் அம்ருதா. அதி அம்ருதா உயர்ந்த சாதி ஆவார். இவர்கள் கடந்த ஆறு மாதங்கள் முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் செக்கப் செய்வதற்காக மருத்துவமனை வந்தபோது, அவர்களை பின்னே தொடர்ந்த யாரோ ஒருவர் பினராயின் தலையில் இரும்புக்கம்பி கொண்டு கொடூரமாக தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடினார். தன்னுடைய கண் முன்னே நடந்த இந்த கொடுஞ்செயலை பார்த்து அம்ருதாவிற்கு என்ன செய்வதென்று அறியாது திகைத்துள்ளார்.  இந்நிலையில் அம்ருதாவையும் மற்றொரு பெண் அடிக்க துரத்தியுள்ளார். ஆனால் அந்த பெண்ணிடம் இருந்து தப்பிப்பதராக அம்ருதா ஓடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த செய்தியை போலீஸ் விசாரணையில் விசாரிக்கையில் அம்ருதா உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்றும், தாழ்ந்த சாதியை சேர்ந்த பினராயி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அம்ருதாவின் தந்தை ஆட்களை வைத்து பினராயை கொலை செய்துள்ளார் என பினராயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


Advertisement