குழந்தைகள் அடிக்கடி பயப்படுகின்றனரா.? விருந்தினர் முன் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்?!How to treat childrens fears

குழந்தைகள் எப்போதும் தங்கள் பெற்றோருடன் அதிக ஒட்டுதலுடனும், பெற்றோர் முன்னிலையில் மிகவும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள். வீடு ஆட்கள் முன் நடனம் ஆடுவஸ்த்து, பாடல் பாடுவது, கதை சொல்வது என்று அவர்கள் தனி உலகில் பல திறமைகளைக் கொண்டிருப்பார்கள்.

children

ஆனால் வீட்டிற்கு யாரேனும் மூன்றாம் நபர்கள் அல்லது விருந்தினர்கள் வந்தால், சில குழந்தைகள் அமைதியாகி விடுவார்கள். அப்போது சில பெற்றோர்கள் விருந்தினர் முன் பாடவும், ஆடவும், கதை சொல்லவும் வற்புறுத்துவார்கள். இது குழந்தைகளுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மேலும் இது விருந்தினர்களிடம் உள்ள கூச்சம் என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையில் கூச்சம் அல்ல. அந்நியர்கள் குறித்த பயம் தான். இதை தடுக்க குழந்தைகளை மற்றவர்களிடம் பயமின்றி பேச வைக்க வேண்டும்.

children

மேலும் புதிய நபர் குழந்தைகளை தனியாக விட்டு விடாமல், அவர்களுடன் குழந்தைகள் ஒட்டும்வரை கூடவே இருக்க வேண்டும். இந்த பயம் குழந்தைகள் வளர்ந்த பிறகும் கூட தொடர வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் பொறுமையாக குழந்தைகளை கையாள வேண்டும்.