மாரடைப்பை தடுக்கும் அற்புதமான 5 டிப்ஸ்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

மாரடைப்பை தடுக்கும் அற்புதமான 5 டிப்ஸ்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!



How to stop tips of heart attack

இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே நமது உடலை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வைக்கிறது.

அந்த வகையில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மேலும் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது. எனவே, மாரடைப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும் எளிய 5 பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

health tips

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது ஒரு எளிய வாழ்க்கை முறை என்றாலும் கூட பலரும் சோம்பேறியாக உள்ளனர். எனவே தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது உடல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. எனவே தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடை பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டுவதால் இதய தசைகளை பலப்படுத்துகிறது. மேலும் இது உடல் எடையை குறைத்து உடலை அழகாக பராமரிக்கிறது. எனவே தினமும் சுமார் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது இதயத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை கொடுக்கிறது.

health tips

நீச்சல்

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கியமான ஒன்று என்றால் அது நீச்சல் தான். குறிப்பாக ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க வாரத்திற்கு 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியமானது. நீச்சல் ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி என்பதால் இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.

நடனம்

நடனமாடுவதால் உடலில் சுவாசம் மற்றும் இதயத்துடிப்பை உயர்த்துகிறது. எனவே 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நடனமாடுவது இதயத்திற்கு நல்ல பலன் அளிக்கிறது.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே 20 முதல் 60 நிமிடங்கள் வரை ஸ்கிப்பிங் செய்யலாம்.