தோழிகள் கண்முன் நீரில் இழுத்து செல்லப்பட்ட இன்ஸ்டா பிரபலம்; ரீல்ஸ் மோகத்தில் "ஆழம் தெரியாமல் கால்களை விட்டதால்" நடந்த சோகம்.!Uttar Pradesh Lucknow Girl Drowned into Water 


ரீல்ஸ் வீடியோ எடுக்கிறேன், இன்ஸ்டாவில் பிரபலமாகிறேன் என விபரீதம் தெரியாமல் நடந்துகொண்டால் வரும் இழப்பு நமது உயிராக கூட இருக்கலாம்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ மாவட்டம், விகாஸ் நகர் செக்டர், சங்கொலி கிராமத்தை சேர்ந்த பெண்மணி மனிஷா (வயது 18). இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பிரபலமடைந்த நபர் ஆவார்.

சம்பவத்தன்று பெண்மணி லக்னோவில் உள்ள இந்திரா கால்வாயில், நீருக்கு மிக அருகில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார். இவருடன் அவரது தோழி மற்றும் உறவினர்களான சிறு குழந்தைகள் இருந்துள்ளனர். 

ஒருகட்டத்தில் ரீல்ஸ் ஆர்வத்தில் பெண்மணி நீருக்குள் இறங்கியபோது, நீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க இயலாமல் அவர் அடித்து செல்லப்பட்டார். அவர் நீரில் அடித்து செல்லப்படுவதை கண்டு அதிர்ந்துபோனவர்கள் காப்பாற்றக்கூறி அலறியுள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்கள் மற்றும் தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மீட்பு படையினர் பெண்ணை தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து, அவரின் உடல் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மனிஷாவின் மரணம் உறுதி செய்யப்படவில்லை.

சிறுமி நீரில் இழுத்து செல்லப்படும் முன் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.