பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
சாப்பிட்ட உடனே நெஞ்செரிச்சலா? அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க!

நாகரீக வளர்ச்சி, மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பலவிதமான மாற்றங்களால் இன்று பலவிதமான நோய்கள் நம்மை தாக்குகிறது. குறிப்பாக சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, சரியான அளவு தூங்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பலவிதமான நோய்கள் உருவாகிறது.
குறிப்பாக இன்று நம்மில் பலருக்கும் இருக்குக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது இந்த நெஞ்செரிச்சல். சாப்பிட்டு முடித்த பிறகு நாம் சாப்பிட உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சுவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கும். இந்த அமிலமானது வயிற்றிலிருந்து உணவுக்குழாய் வழியாக மேல் நோக்கி வரும்போது நெஞ்செரிச்சல் உண்டாகிறது.
கடினமான உணவு சாப்பிடும் போது, அதிகப்படியான அசைவ உணவு சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் வருவது வழக்கமான ஓன்று. ஆனால், தினம் தினம் இந்த பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகுவது பல்வேறு ஆபத்துகளை தடுக்க உதவும்.
இந்த நெஞ்செரிச்சலை எப்படி சரி செய்வது? கடினமான உணவுகளை தவிர்த்து மென்மையான உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதிகமான திரவ உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
மது பழக்கம், புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பழக்கத்தை கைவிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
மேலும் கொழுப்பு, எண்ணெய் வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.சாப்பிட்டு முடித்ததும் சீரகம் கலந்த வெந்நீரை குடிக்க வேண்டும். இது இரைப்பையிலிருந்து வெளி வரும் அமில சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. தண்ணீரில் இஞ்சிசாறு ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம், அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும். இவற்றை முறையாக கடைபிடிப்பதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். அதிக அளவில் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.