நீங்கள் சமைத்த உணவில் உப்பு அதிகமானால் என்ன செய்வது.? அருமையான டிப்ஸ்!!

நீங்கள் சமைத்த உணவில் உப்பு அதிகமானால் என்ன செய்வது.? அருமையான டிப்ஸ்!!



 How to reduce excess of salt in food

சமையலுக்கு ருசியையும், சுவையையும் தருவதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான அளவு உப்பு மற்றும் காரம் தான். சமையலில் காரம் அதிகமானால் கூட ஓரளவிற்கு சாப்பிட்டு விடலாம். ஆனால் உப்பு அதிகமானால் அந்த உணவை குப்பையில் போட வேண்டியது தான். 

அப்படி உப்பு அதிகமானால் அதனை எளிதில் சரி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
குழம்பில் உப்பு அதிகமானால் சிறிதளவு தண்ணீர் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அல்லது ஒரு உருளைக்கிழங்கை வெட்டி குழம்பில் போட்டு ஒரு 10 நிமிடம் கொதிக்க விட்டு பின் உருளைக்கிழங்கை எடுத்து விட்டால் குழம்பில் உப்பு சரியாகிவிடும்.

Excess of salt

அசைவ குழம்புகளில் உப்பு அதிகமானால் அதில் சிறிதளவு தேங்காய் பால் அறைத்து ஊற்றி விட்டால் உப்பு சரியாகி விடும். குருமா வகைகளில் உப்பு அதிகமானால் ஒரு டீஸ்பூன் கடலை மாவு சோளா மாவு தண்ணீரில் கலந்து குருமாவில் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க விட்டால் உப்பு சரியாகிவிடும்.

பொரியல், பிரியாணி மற்றும் வெரைட்டி ரைசில் உப்பு அதிகமானால் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி சேர்த்தால் உப்பு சரியாகிவிடும். இட்லி மாவில் உப்பு அதிகமானால் அதில் 1/2 கப் ரவையை வறுத்து ஊற வைத்து பின் அதனை மாவுடன் கலந்து இட்லி ஊற்றினால் உப்பு சரியாகிவிடும்.

Excess of salt

ரசத்தில் அதிகமான உப்பை சரி செய்ய சிறிதளவு புளிக்கரைசல், சீரகம் மற்றும் மிளகு இடித்து சேர்த்தால் உப்பு சரியாகிவிடும்.