மலச்சிக்கலை சரியாக்கி புரதச்சத்தை அதிகரிக்கும் தினை தேங்காய்ப்பால் அப்பம் செய்வது எப்படி?..!

மலச்சிக்கலை சரியாக்கி புரதச்சத்தை அதிகரிக்கும் தினை தேங்காய்ப்பால் அப்பம் செய்வது எப்படி?..!


How to prepare thinai appam

நாள்தோறும் தினையை ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கு தினை அரிசி உபயோகம் ஆகும். தினையில் புரதசத்து உள்ளது. கொழுப்பு சத்து என்பது இல்லை. இன்று தினை தேங்காய் பாலில் அப்பம் செய்வது எப்படி என காணலாம். 

தேவையான பொருட்கள்:

தேங்காய் - அரை மூடி, 

நெய் அப்பம் - தேவையான அளவு,

தினை - 200 கிராம்,

பொடித்த வெல்லம் - ஒரு கிண்ணம்,

வாழைப்பழம் - 1,

ஏலக்காய் தூள் - 1 கரண்டி.

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட தேங்காயை துருவி பால் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தினையை வறுத்து மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

★பின் வெல்லத்தினை கரைத்து எடுத்துக்கொண்டு, அதனோடு தேங்காய் பால், தினைமாவு, ஏலக்காய் தூள் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து கெட்டியாக கரைக்க வேண்டும். 

★இதனை குழிபணியாரக்கல்லில் நெய் சேர்த்து, ஒவ்வொரு குழியிலும் மாவினை ஊற்றி மிதமான தீயில் வேகவைத்து எடுத்தால் சுவையான தேங்காய் பால் அப்பம் தயார்.