உடலுக்கு நன்மையளிக்கும் திணை - தேங்காய்ப்பால் புலாவ்.. ஈசியாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!

உடலுக்கு நன்மையளிக்கும் திணை - தேங்காய்ப்பால் புலாவ்.. ஈசியாக வீட்டிலேயே செய்து அசத்துங்கள்..!!



How to prepare Thengapal Pulav

 

சிறுதானியங்கள் அடங்கிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை சீர்செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் - அரை மூடி 
வெங்காயம் - ஒன்று 
திணை அரிசி - ஒரு கப் 
பச்சைபட்டாணி - அரைக்கப் 
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி 
தண்ணீர் - ஒரு கப் 
பச்சை மிளகாய் - 4 
எண்ணெய் - 4 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க :

பிரியாணி இலை - ஒன்று 
ஏலக்காய் - ஒன்று 
சோம்பு - கால் தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் திணை அரிசியை 10 நிமிடங்கள் நன்கு ஊறவைக்க வேண்டும்.

★குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு தாளித்த பின், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

★வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

★அடுத்து பச்சை வாசனை போனவுடன் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி ஒரு கப் தேங்காய் பால், தண்ணீர், உப்பு, திணை அரிசி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

★பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கினால் சூப்பரான திணை-தேங்காய்ப்பால் புலாவ் தயாராகிவிடும்.