உடலுக்கு பல சத்துக்களை வாரி வழங்கும் சிறுதானிய அடை செய்வது எப்படி?.!

உடலுக்கு பல சத்துக்களை வாரி வழங்கும் சிறுதானிய அடை செய்வது எப்படி?.!



How to Prepare Siruthaniya Adai

சிறுதானிய உணவுகள் உடலுக்கு சக்தி, நோயற்ற வாழ்க்கை ஆகியவற்றை கொடுக்கும். இன்று எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களை கொண்டு அடை எப்படி செய்வது என காணலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு, கம்பு, சோளம், கொள்ளு, பாசிப்பயறு, சாமை, குதிரைவாலி, வரகரிசி - தலா 1/4 கிலோ, 
தோலுடன் இருக்கும் கருப்பு உளுந்தம் பருப்பு - 4 கரண்டி 
முருங்கை கீரை - 1 கைப்பிடி அளவு கொண்டைக்கடலை - 4 கரண்டி வெங்காயம் - 2 
இஞ்சி - சிறிதளவு 
காய்ந்த மிளகாய் - 8 
பூண்டு - 10 பற்கள் 
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

★பின் கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசிப்பயறு, சாமை அரிசி, வரகு அரிசி, கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை ஆகியவற்றை நன்றாக கழுவி 12 மணிநேரம் வரை ஊறவைக்க வேண்டும். 

★இவை நன்றாக ஊறியதும் வெள்ளை துணியில் கட்டி முளைகட்டும் வரை காத்திருக்க வேண்டும். 

★மறுநாள் காலையில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து மாவுடன் உப்பு சேர்த்து 4 மணிநேரம் புளிக்க விட வேண்டும். 

★நான்கு மணிநேரம் கழித்து முருங்கைக் கீரையை கலந்து தோசை போல சுட்டு எடுத்து சாப்பிடலாம். 

★இதன் மூலமாக தேவையற்ற உடல் கொழுப்புகள் வெளியேற்றப்படும். இதய நோய் உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம் குறையும். நார்ச்சத்து காரணமாக சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். முதுகெலும்பு வலி குறையும்.