தீபாவளி ஸ்பெஷல்: சுவையான சர்க்கரை வரட்டி வீட்டிலேயே செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே செய்து அசத்துங்கள்..!!



How to prepare sarkarai varatti

கேரளாவில் திருமணம் மட்டுமல்லாமல் பண்டிகைகளுக்கு ஸ்பெஷலாக வழங்கப்படும் சர்க்கரை வரட்டி எப்படி செய்வது என தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

பெரிய வாழைக்காய் - 4 

வெல்லம் - முக்கால் கப் 

ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி

சுக்குத்தூள் - கால் தேக்கரண்டி 

எண்ணெய் - தேவைக்கேற்ப

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

health tips

செய்முறை:

★முதலில் வாழைக்காயை தோல் சீவி அரைவட்டங்களாக நறுக்கி தட்டில் பரப்பி, பத்து நிமிடங்கள் உலர விட வேண்டும்.

★ஒரு வானலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், வாழைக்காய் துண்டுகளை சேர்த்து அடுப்பை சிறுதீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும். 

★பின் எண்ணையை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.

★மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்துடன் கால்கப் வெந்நீர் ஊற்றி வடிகட்ட வேண்டும்.

★பின் வெள்ளை கரைசலை கொதிக்க வைத்து பாகு காய்ச்சி இறக்கவும்.

★அதனுடன் ஏலக்காய் தூள், சீரகத்தூள், சுக்குத்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் வாழைக்காய் சிப்ஸுடன் சேர்க்க வேண்டும்.

★அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சர்க்கரையை தூவினால் சர்க்கரை வரட்டி தயாராகிவிடும்