குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் லட்டு..10 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?..!!

குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் லட்டு..10 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?..!!


how to prepare coconut laddu

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேங்காய் லட்டு எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தேவையான பொருட்கள் :

சர்க்கரை - 1 கப் 
நெய் - 2 தேக்கரண்டி 
துருவிய தேங்காய் - 1 கப் 
ஏலக்காய் - 3 
முந்திரி - தேவைக்கு ஏற்ப 
திராட்சை - தேவைக்கு ஏற்ப

coconut laddu recipe

செய்முறை :

★முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.

★சர்க்கரை உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து கைவிடாமல் நன்கு கிளற வேண்டும்.

★அடுத்து ஏழு நிமிடங்களை ஒரு தட்டில் எடுத்து வைத்து மிதமான சூட்டில் லட்டு பிடித்து பரிமாறினால் பத்து நிமிடத்தில் தேங்காய் லட்டு தயாராகிவிடும்.