லைப் ஸ்டைல்

சுவையான சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?..!

Summary:

சுவையான சேமியா சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?..!

சேமியாவில் கிச்சடி, உப்புமா, பாயசம், கேசரி என பலவகையான உணவுகளை நாம் சமைத்து சாப்பிட்டு இருப்போம். இன்று சிக்கன் சேமியா பிரியாணி எப்படி செய்வது என காணலாம். 

சிக்கன் சேமியா பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் : 

சேமியா - கால் கிலோ 
சிக்கன் - கால் கிலோ 
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை - சிறிதளவு 
வெங்காயம் மற்றும் தக்காளி (தனித்தனியாக நறுக்கியது) - 1 
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன், 

தயிர் - சிறிதளவு 
பச்சை மிளகாய் - 2 
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு 
மிளகாய்தூள், சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா, மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
முந்திரி பருப்பு - 25 கிராம் 
உப்பு, நெய் - தேவையான அளவு 

தாளிப்பதற்கு : 

கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சோம்பு.

சிக்கன் சேமியா பிரியாணி செய்முறை : 

முதலில் எடுத்துக்கொண்ட சேமியாவை கடாயில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கியதும், சிக்கனை சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி எடுக்க வேண்டும். 

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து, தாளிக்க மேற்கூறப்பட்டுள்ள பொருட்டாக்களை சேர்த்து தாளித்து, முந்திரி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். 

வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட்டை பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு, தக்காளி, கொத்தமல்லி மற்றும் புதினா, எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து வதக்க வேண்டும். 

தக்காளி நன்கு குழைய வதங்கிய பின்னர், சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். சிக்கன் முக்கால் பங்கு வெந்து முடிந்ததும் மிளகாய்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். 

பின்னர், அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இந்த கலவை கொதிக்க தொடங்கியதும், சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, 20 நிமிடம் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் சேமியா தயார். 


Advertisement