சுவையான காலிஃபிளவர் பேப்பர் ஃப்ரை.. வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?..!



How to prepare cauliflower pepper fry

 

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காலிஃபிளவர் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று காணலாம். 

செய்ய தேவையான பொருட்கள் : 

காலிபிளவர் - 1 

கடுகு - சிறிதளவு

உளுந்தம் பருப்பு - சிறிதளவு

நெய் - ஒரு தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன் 

செய்முறை :

★முதலில் எடுத்துக் கொண்ட காலிஃப்ளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரில் சுமார் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 

★பின்னர் மிளகு, சீரகத்தை பொடித்து வானலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து பின் காலிபிளவரை மிதமான தீயில் வதக்க வேண்டும். 

★இடித்து வைத்த மிளகு மற்றும் சீரகத்தை தூவி இறக்கினால் சூப்பரான காலிபிளவர் பெப்பர் ஃப்ரை தயார்.