நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கருப்பு அரிசி தோசை செய்வது எப்படி?..! இன்றே செய்து அசத்துங்கள்..!!How to prepare black rice dosa

இன்றளவில் நீரழிவு நோயால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்காக நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் கருப்பு அரசியில் சுவையான தோசை செய்வது எப்படி என்று காணலாம்.

இந்த தோசையால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் குறைக்கப்படும். அதேபோல கருப்பு அரிசியில் இருக்கும் குறைந்த அளவிலான கலோரி, கொழுப்புச்சத்து அதிகளவிலான நார்ச்சத்து நமது உடலுக்கு உதவி செய்கிறது.

தேவையான பொருட்கள் :

கருப்பு அரிசி - 1 கிண்ணம் 

உளுந்து - 1/4 கிண்ணம் 

வெந்தயம் - 1 தேக்கரண்டி 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

Latest news

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட கருப்பு அரிசி, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் நீரில் ஊறவைத்து பின்னர் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

★பின்னர் 8 மணிநேரம் புளிக்கவிட்டு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து தோசை போல ஊற்றி எடுத்து விரும்பிய சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவையான கருப்பு அரிசி தோசை தயார்.