உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் சப்பாத்தி..! வீட்டிலேயே செய்வது எப்படி?..!!
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் சப்பாத்தி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பீட்ரூட் உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க இயலும். மேலும் பீட்ரூட்டில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது.
தேவையான பொருட்கள் :
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கோதுமை மாவு - 2 கப்
அரைக்க :
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
பீட்ரூட் - 1
செய்முறை :
★முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
★வடிகட்டிய சாறுடன் நெய், கோதுமை மாவு, உப்பு, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
★பின் மாவை சப்பாத்தியாக திரட்டி தோசைகல்லை அடுப்பில் வைத்து சூடானதும், செய்து வைத்த சப்பாத்தியை போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறினால் சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி தயாராகிவிடும்.