சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் சத்தான வாழைத்தண்டு சட்னி.. வீட்டிலேயே செய்து அசத்துவது எப்படி?..!!

உடலுக்கு பல நன்மைகளை அளித்து ரத்தத்தின் சர்க்கரை அளவு உயர்வதை தடுக்கும் வாழைத்தண்டு சட்னி எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
வாழைத்தண்டு சட்னியை சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் தொற்று உள்ளவர்கள் உட்கொள்வது மிகவும் நல்லது. மேலும் இரத்தத்தின் சர்க்கரை அளவு உயர்வதையும் தடுக்கிறது
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - 10 தேக்கரண்டி
நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிய துண்டு
புளி - தேவைக்கேற்ப
உளுந்து - 3 தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - இரண்டு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு :
கடுகு - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
கருவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
★முதலில் வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
★பின் வெறும் வாணலியில் உளுந்து, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிட்டு தனியே எடுத்துக் கொள்ளவும்.
★பின் அதே வானலில் எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும்.
★வாழைத்தண்டு நன்கு ஆறியதும் முன்பே வறுத்து வைத்ததை சேர்த்து தேங்காய் துருவல், உப்பு, புளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
★இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து சட்னியில் கலந்து பரிமாறினால் சத்தான வாழைத்தண்டு சட்னி தயார்.