இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட நார்த்தங்காய் ஊறுகாயை இப்படி செய்து பாருங்கள்.!

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட நார்த்தங்காய் ஊறுகாயை இப்படி செய்து பாருங்கள்.!



How to make delicious Narthangai pickle

சுவை  மிக்க நார்த்தங்காய் ஊறுகாயை செய்வது எப்படி? என்பது பற்றிய தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

Narththankaai Pickleதேவையான பொருட்கள் :

தனியா -1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்

கடலை பருப்பு -2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 4

புளி கரைசல் - 1/4 கப்

வெல்லம் - 1/2 கப்

நறுக்கிய நார்த்தங்காய் - 1 கப்

தாளிக்க தேவையான பொருட்கள் :

கருவேப்பிலை - 10

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 6 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அதன் பிறகு அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

Narththankaai Pickle

அடுத்தபடியாக அதில் நார்த்தங்காய் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய் போடவும். பின்னர் இது வதங்கியவுடன்  மஞ்சள்த்தூள், உப்பு உள்ளிட்ட இரண்டையும் சேர்த்து, நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்தால், சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் ரெடியாகிவிடும்.