உங்கள் வீட்டிலுள்ள பொருட்களை பளிச்சென்று மின்ன வைக்கணுமா?.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! How to clean things nature tips

நமது வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் தினமும் சுத்தம் செய்வது இயலாத ஒன்று என்றாலும், அதனை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என மேற்கொள்ளும் பொது, இயற்கை பொருட்களை வைத்து பளபளக்க வைக்கலாம்.

வீட்டில் துருப்பிடித்து இருக்கும் பொருட்களில் உள்ள துருக்களை அகற்ற, உருளைக்கிழங்கு கொண்டு தேய்த்து அகற்றலாம். இதனால் துரு விரைந்து நீங்கும். 

வீட்டில் உள்ள பொருட்கள்

பாத்திரத்தில் உள்ள கருமை நிறத்தை அகற்ற, காபி தூளை தேய்த்து கழுவலாம். ஜன்னல்களில் இருக்கும் எண்ணெய் பசை தன்மையை அகற்ற வெங்காயம் கொண்டு துடைத்து எடுக்கலாம். பாத்திரம் கழுவும் தொட்டியில் இருக்கும் அழுகை வெளியேற்ற, எலுமிச்சை கொண்டு அதனை சுத்தம் செய்யலாம்.